சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sept 2021 2:28 PM IST (Updated: 20 Sept 2021 2:28 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக வந்த கடலூரைச் சேர்ந்த 28 வயது வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அவரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story