செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 114 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 114 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 809 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேர் உயிரிழந்துள்ளனர். 1,256 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரத்து 930 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,240 ஆக உயர்ந்தது. 350 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story