தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Sept 2021 9:41 PM IST (Updated: 20 Sept 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கோவை

தினத்தந்தி செய்தி எதிரொலி:
ஒளிர தொடங்கிய தெருவிளக்கு

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தின் முன்புறமுள்ள மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் தெருவிளக்கு ஒளிராமல் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. 

உடனே கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பழுதடைந்த தெருவிளக்கு மாற்றப்பட்டது. இதனால் தெருவிளக்கு மீண்டும் ஒளிர தொடங்கியது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதனால், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
கணேசன், கோத்தகிரி. 

பாலம் கட்டப்படுமா?

கூடலூர் தாலுகா நாடுகாணியில் இருந்து அட்டி பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே இருந்த சிமெண்ட் பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழை வெள்ளத்தில் உடைந்தது. 

இதனால் மரக்கட்டைகளை வைத்து பொதுமக்கள் ஆற்று வாய்க்காலை கடந்து செல்கின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அங்கு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமன், நாடுகாணி.

இயங்காத சிக்னல் 

கோவை-திருச்சி சாலையில் உள்ள பாப்பம்பட்டி பிரிவில் அமைக்கப்பட்டு இருக்கும் சிக்னல் சரிவர இயங்குவது இல்லை. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 

ஆனால் இங்குள்ள சிக்னல் சரியாக இயங்காததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சிக்னல் சீராக இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
ரஜினி செந்தில், கோவை. 

பஸ்நிலையம் வேண்டும்

சூலூரில் சாலை ஓரத்தில் பஸ்நிலையம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதை இடித்துவிட்டு வேறு பகுதியில் பஸ் நிலையம் கட்டப்பட்டது.

 ஆனால் பயணிகள் பலர் பழைய பஸ்நிலையம் இருந்த இடத்தில் இருந்துதான் பஸ்கள் ஏறி வருகிறார்கள். அங்கு பஸ்களும் நிறுத்தப்படுகிறது. எனவே அந்த இடத்தில் பொதுமக்கள் காத்திருக்க சிறிய அளவிலான பஸ்நிலையம் அமைக்க வேண்டும்.
நடராஜன், சூலூர்.

பஸ் இயக்கப்படுமா?

சூலூர் தாலுகா காடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் கிராமத்துக்கு தினமும் 3 முறை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஒருமுறை மட்டுமே பஸ் வந்து செல்கிறது. 

இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து முன்பு உள்ளதுபோன்று 3 முறை பஸ்சை இயக்க வேண்டும்.
கந்தன், குமாரபாளையம்.

குண்டும்-குழியுமான சாலை

பீளமேட்டில் உள்ள மேம்பாலம் பகுதி முதல் பெருமாள்கோவில் வீதி வழியாக செல்லும் சாலை பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது.

 இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாலு, பீளமேடு. 

அரைகுறையான சாலை 

கோவை குனியமுத்தூர் கே.ஜி.கே. நகர் பகுதியில் தார்சாலை அமைக்க ஜல்லி கற்கள் போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் சாலை பணிகள் தொடங்க வில்லை. 

இதனால் அந்த சாலை அரைகுறையாக இருப்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதி யடைந்து வருகிறார்கள்.

குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும். 
செந்தில்வேலன், கே.ஜி.கே.நகர். 

ஓட்டை விழுந்த குப்பை தொட்டி 

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் ஆர்.வி.நகரில் குப்பை தொட்டி உள்ளது. இந்த தொட்டி ஓட்டை விழுந்து இருப்பதால் அதில் போடப்படும் குப்பைகள் அனைத்தும் கீழே விழுந்து சிதறி கிடக்கிறது. 

அந்த குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் வந்து விழுகிறது. எனவே பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே புதிதாக குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
கிரண், ஆ.வி.நகர்.

கழிவுநீரில் கொட்டப்படும் குப்பைகள் 

குன்னூர் ராஜாஜி நகரில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதை அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால், கழிவுகள் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. 

இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.
ரசூல், குன்னூர். 

தெருநாய்கள் தொல்லை

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலைகளிலும், வீதிகளிலும் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. 

அப்போது அந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்க முயற்சி செய்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பீதி அடைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.
வேல்முருகன், நெகமம்.

நடைபாதை ஆக்கிரமிப்பு 

கோவை சுங்கம் தபால் நிலையத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் சாலையில் உள்ள நடைபாதையில் பலர் கடை வைத்து உள்ளனர். இ தனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. 

அத்துடன் அங்கு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். 
மணிகண்டன், ராமநாதபுரம். 

பயணிகள் நிழற்குடை 

காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனியில் பஸ்நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற்குடை அமைக்கவில்லை. 

இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள், மழைக்காலத்தில் மழையில் நனைந்தபடியும், வெயில் காலத்தில் வெயிலில் காய்ந்துகொண்டும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். 
முருகேசன், காரமடை.


Next Story