உள்ளாட்சி இடைதேர்தலில் போட்டியிட இதுவரை 32 பேர் வேட்புமனு தாக்கல்


உள்ளாட்சி இடைதேர்தலில் போட்டியிட இதுவரை 32 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 20 Sept 2021 10:25 PM IST (Updated: 20 Sept 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி இடைதேர்தலில் போட்டியிட இதுவரை 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.


கோவை
கோவை மாவட்டத்தில்  நடக்கும் உள்ளாட்சி இடைதேர்தலில் போட்டியிட இதுவரை 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். 

வேட்புமனு தாக்கல்

கோவை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி உள்பட 16 உள்ளாட்சி இடங்களுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடக்கிறது. 

இதில் 77 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட வசதியாக கடந்த 15-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. 

மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களுக்கு இதுவரை 32 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடத்துக்கு இதுவரை 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

 தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை நிறைவடைகிறது. 

போலீஸ் பாதுகாப்பு

இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால்  ஏராளமானோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

உள்ளாட்சி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 22-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடையும் நிலையில் இதுவரை 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். 

இதில்  27 பேர் தாக்கல் செய்தனர். 23-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், 25-ந் தேதி வேட்பு மனு திரும்ப பெறலாம். அன்று மாலை வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். 

இதனைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். 9-ந் தேதி வாக்குப்பதிவும், 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story