கோவையில் வருகிற 24 ந் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்
கோவையில் வருகிற 24 ந் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்
கருமத்தம்பட்டி
கோவையில் வருகிற 24-ந் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
செயற்குழு கூட்டம்
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சோமனூர் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அலுவலக கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். இதில் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
24-ந் தேதி பேச்சுவார்த்தை
கடந்த 7 ஆண்டுகளாக விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வு இல்லாமல் தொழில் நடத்த முடியாத நிலையில் 2014&ம் ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
அதில் இருந்து 60 சதவீத கூலி உயர்வு கேட்டு கோவை, திருப்பூர் கலெக்டரிடம் கடந்த ஜூலை மாதம் 20 மற்றும் 25&ந் தேதிகளில் மனு கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கலெக்டர்கள் எடுத்த நடவடிக்கையின் பேரில் கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் 4 முறையும், திருப்பூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் 3 முறையும் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் ஒரு சில ஜவுளி உற்பத்தியாளர்கள் தவிர மற்ற அனைத்து பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
கூலி உயர்வு
எனவே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 24-ந் தேதி கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் வறுமையில் வாடும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 2014&ம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இருந்து 60 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படவில்லை என்றால் கலெக்டர்கள் நேரடியாக தலையிட்டு உடனடியாக அனைத்து பகுதி ஜவுளி உற்பத்தியாளர்களையும் அழைத்து பேச வேண்டும்.
அத்துடன் எங்கள் நியாயமான கோரிக்கையான கூலி உயர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story