சூலூர் விமானப்படை பயிற்சி மையத்தில் மேலும் ஒரு ஓடு பாதை
சூலூர் விமானப்படை மையத்தில், மேலும் ஒரு ஓடுபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
கோவை
சூலூர் விமானப்படை மையத்தில், மேலும் ஒரு ஓடுபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
சூலூர் விமானப்படை
சூலூர் விமானப்படை தளம், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி தென்இந்தியாவுக்கு மிக முக்கிய பயிற்சி மையமாகவும், போர் உள்ளிட்ட நேரங்களில் போர் விமானங்கள் மற்றும் இலகுரக போர் விமானங்கள் செல்லும் முக்கிய மையமாகவும் உள்ளது.
இந்த நிலையில் சூலூர் விமானப்படையில் உள்ள ஓடுபாதை போதுமான அளவில் இருந்தாலும், போர்க்காலங்களில் ராணுவ தளவாடங்களை விமானத்தில் ஏற்றிச்செல்லவும், போர் விமானங்கள் செல்லவும் மற்றொரு ஓடுபாதை அமைக்க ராணுவத்துறை முடிவு செய்து உள்ளது.
400 ஏக்கர் நிலம்
இதற்காக மொத்தம் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 200 ஏக்கர் நிலம் புதிய ஓடுபாதை அமைக்கவும், 200 ஏக்கர் நிலம் ஆயுதங்களை கையாளுதல், மற்றும் ஆயுத கிடங்கு அமைக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.
மேற்கு வங்காள கடல் பகுதி, அந்தமான் நிகோபார் தீவுப்பகுதிவரை இங்கிருந்து விமானங்கள் சென்று பாதுகாப்பை மேம்படுத்த உதவும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "சூலூர் விமானப்படை மையத்தை ஒட்டியுள்ள காங்கேயம்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, கலங்கல் பகுதியில் இருந்து 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நிலம் கையகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தமிழக நில நிர்வாகத்துறைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
ராணுவத்துறை நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யும். நிலம் கையகப்படுத்த தனி வருவாய்த்துறை அதிகாரி நியமிக்கப்படுவார். மத்திய ராணுவத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்" என்றனர்.
Related Tags :
Next Story