மதுரையில் புதிதாக 27 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 27 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Sept 2021 2:41 AM IST (Updated: 21 Sept 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் புதிதாக 27 பேருக்கு கொரோனா

மதுரை
மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிக கடுமையாக இருந்தநிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வருகிறது. மதுரையிலும் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதன்படி, மதுரையில் நேற்று 4500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 18 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 14 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 8 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 973 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 100-க்கும் குறைவாக இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
சிகிச்சையில் 199 பேர்
நேற்றைய நிலவரப்படி, மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 199-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 23 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதுபோல், 79 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1163 ஆக உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இருந்தாலும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். தகுதி உள்ள நபர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.
=====
1 More update

Next Story