பெண்களின் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவேற்றிய அரசு ஊழியர் பணி இடைநீக்கம்


பெண்களின் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவேற்றிய அரசு ஊழியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 21 Sept 2021 2:48 AM IST (Updated: 21 Sept 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

பெண்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசு ஊழியர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெண்களின் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவேற்றிய
அரசு ஊழியர் பணி இடைநீக்கம்
ஈரோடு, செப்.21-
பெண்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசு ஊழியர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.
வருவாய் ஆய்வாளர்
ஈரோடு மாவட்டம் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 33). திருமணமானவர். இவர் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். 
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சதீஷ்குமார் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது ஆகிய பிரிவுகளில் கீழ் சதீஷ்குமார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
இந்த நிலையில் கைதான சதீஷ்குமார் மீது துறை ரீதியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.


Next Story