வனக்கோவிலுக்கு செல்ல தடை விதித்ததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மலைகிராம மக்கள் சாலை மறியல்
வனக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
தாளவாடி
வனக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
வனக்கோவில்
தாளவாடி அடுத்த தலமலை வனச்சரகத்திற்கு உள்பட்ட வனப்பகுதியில் உடும்பன் மற்றும் ஆல்மாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மலைகிராமத்தை சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் மலைகிராம மக்கள் பொங்கல் வைக்க நேற்று சென்றனர். ஆனால் தலமலை வனத்துறை சோதனைச் சாவடியில் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
பஸ் சிறைபிடிப்பு
அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக அந்த வழியாக ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை மலை கிராம மக்கள் சிறைபிடித்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலமலை வனச்சரகர் சுரேஷ், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் அங்கு சென்று மலைகிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் சுழற்சி முறையில் மலைகிராம மக்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்தது. இதனால் போராட்டத்தை கைவிட்டு மலை கிராமமக்கள் பஸ்சை விடுவித்தார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story