மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.


மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
x
தினத்தந்தி 20 Sep 2021 9:55 PM GMT (Updated: 20 Sep 2021 9:55 PM GMT)

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 
மத்திய அரசை கண்டித்து
கடந்த மாதம் 20-ந் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடவேண்டும். பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து 20&ந் தேதி அவரவர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 
கோபி
கோபியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். கோபி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜ் தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தி.மு.க.வைச் சேர்ந்த சிந்து ரவிச்சந்திரன் தன்னுடைய வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் முன்னாள் நகர செயலாளர் மணிமாறன், குமணன் மற்றும் தி.மு.க.வினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செபாஸ்டியன், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் சித்தமலை, அந்தியூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் நாகராஜ், வார்டு செயலாளர் தங்கராசு உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். 
காங்கிரஸ் சார்பில்
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் நால் ரோட்டில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் பி.எஸ்.எஸ். சச்சிதானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாநிலச் செயலாளர் சேது வெங்கட்ராமன், வட்டார தலைவர் அருளானந்தம். சந்திரன். பிரகாஷ். நாகராஜ் உள்பட தி.மு.க.வினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சிபி.இளங்கோ தலைமையில் அவருடைய வீட்டு முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோணமூலை ஊராட்சி தலைவர் குமரேசன், அரியப்பம்பாளையம் பேரூர் மாவட்ட பிரதிநிதி என்.மாணிக்கம், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் சந்தோஷ்குமார், அரியப்பம்பாளையம் 4-வது வார்டு செயலாளர் தங்கவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் சுடர் நடராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். 
சத்தி நகர தி.மு.க.
சத்தியமங்கலம் நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்புக் குழு தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில் அவருடைய வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சத்தி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ரங்கசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் சாமிக்கவுண்டர், மணிகண்டன் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் ஸ்டாலின் சிவகுமார், மகளிர் அணியைச் சேர்ந்த மல்லிகா உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 
பவானி
பவானியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புதிய பஸ் நிலையம், அந்தியூர் பிரிவு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம், நகர தி.மு.க. அலுவலகம் 4 இடங்களில் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
ஆர்ப்பாட்டத்துக்கு பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளர்களான சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஜெகநாதன், பவானி நகர காங்கிரஸ் சார்பில் கதிரவேல், தி.மு.க. நகர தலைவர் மாணிக்கவேல், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் தவமணி, முன்னாள் நகரமன்ற தலைவர் எம்.ஆர்.துரை, வழக்கறிஞர் செந்தில்குமரன், ஒன்றிய கவுன்சிலர் சதீஷ், ஆடிட்டர் முருகேசன், மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சித்தையன், பவானி நகர துணை செயலாளர் சின்னம்மாள், இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். 
சத்தியமங்கலம் 
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சி.ஆர்.ஆறுமுகம் தலைமையில் அவருடைய வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் மைதிலி, மற்றும் ஊராட்சி கமிட்டி தலைவர் சி.கே.திருமப்பன், செயலாளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் நஞ்சப்பன் மற்றும் சரவணன், செல்வன், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். 
பவானி ஒன்றிய தி.மு.க. 
பவானி ஒன்றிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பவானி ஒன்றிய பொறுப்பாளர் காசுமகேந்திரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் பி.கே.பழனிச்சாமி, பொறுப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகர், பவானி ஒன்றிய குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட மாணவர் அணியின் துணை அமைப்பாளர் சத்யமூர்த்தி, தி.மு.க. நெசவாளர் அணி பொறுப்பாளர் தங்கவேலு, தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய பொறுப்பாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டு கையில் கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். 
சென்னிமலை
சென்னிமலையில் தி.மு.க சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.பிரபு, வடக்கு ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன் ஆகியோர் தலைமையில் அந்தந்த பகுதிகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கே.பன்னீர்செல்வம், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கொடுமணல் கோபால், சதீஷ் என்கிற பி.சுப்பிரமணியம் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள்
பெரியபுலியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பெரியபுலியூர் ஊராட்சி  தலைவர்கள் எஸ்.வி.குருசாமி, வி.கே.துரைசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சாதிக், மாவட்ட பொருளாளர் மிசாதங்கவேல், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கருப்பணன், பெரியபுலியூர் ஊராட்சி கிளைக் கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், காங்கிரஸ் பகுதி செயலாளர் நல்லசாமி பொன்னுசாமி, தி.மு.க. பொறுப்பாளர் நடராஜ் முத்து உள்பட பலர் கலந்துகொண்டார்கள். 
பெரியபுலியூர் தி.மு.க.
பெரியபுலியூரில் தி.மு.க. சார்பில், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 3-வது வார்டு பகுதி கழக செயலாளர் ரமேஷ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிளைக் கழக பொறுப்பாளர்கள் சேகர், பிரகாஷ், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி நகர தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து 20 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். 
கம்யூனிஸ்டு சார்பில்...
கோபி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். 
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கீழ்பவானி பாசன சபை இணை செயலாளர் பாமா வெங்கடாசலபதி, மரகதசெல்வி நல்லசிவம், சத்தியமூர்த்தி, மனோகரன், பழனிச்சாமி உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். 
கவுந்தப்பாடி அருகே உள்ள கவுண்டன்புதூரில் பவானி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.துரைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல் கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 
தாளவாடி
தாளவாடி ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் டி.சிவண்ணா தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 
சிவகிரி
சிவகிரி கடை வீதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வரதராசன் தலைமை தாங்கினார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைமை நிலைய செயலாளர் சீனிவாசன், தி.க. மாவட்ட அமைப்பாளர் சண்முகம், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். 
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் துரைசாமி தலைமையில் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

Next Story