காஞ்சீபுரம் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் சிக்கியது
காஞ்சீபுரம் புஞ்சை அரசன்தாங்கல் அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 800 சிக்கியது.
காஞ்சீபுரம்,
உள்ளாட்சி தேர்தல் தேதியானது அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையானது ஊராட்சி எல்லைகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் புஞ்சை அரசந்தாங்கல் சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை துறையின் சிறப்பு தாசில்தார் வரதராஜன் தலைமையில் தலைமை காவலர் பானு மற்றும் காவலர் வன்னிராஜ் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மாமண்டூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற சென்னை- பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 800 கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story