கண்மாய்க்குள் கார் கவிழ்ந்து சிறுவன் பலி
கொட்டாம்பட்டி அருகே கண்மாய்க்குள் கார் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே கண்மாய்க்குள் கார் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். பெற்றோர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் சென்றனர்
திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது நபி. இவருடைய மகன் இர்சாத்அகமது (வயது 33). சென்னை குளத்தூரில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஹமிதா ஹாசிதா (28) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
மனைவி ஹமிதாஹாசிதாவின் தந்தை நெல்லையில் உயிரிழந்து விட்டார். இதனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து இர்சாத் அகமது, மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் வந்துள்ளார். கார் கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்யாபட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையில் வரும்போது திடீரென குறுக்கே மாடு ஒன்று வந்தது.
சிறுவன் பலி
இதனால் மாட்டின் மீது மோதாமல் இருக்க காரை திடீரென பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறிய கார் கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து ஊழியர்கள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் ஆசில்சினன்(8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story