கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 21 Sep 2021 9:32 PM GMT (Updated: 21 Sep 2021 9:32 PM GMT)

பெண் தற்கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை
பெண் தற்கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தற்கொலை
மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் துரைப்பாண்டி. கூலித்தொழிலாளி. இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 2001&ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். துரைப்பாண்டி அடிக்கடி மதுபோதையில் தனது மனைவியை அவரது தாயாரிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
துரைப்பாண்டியுடன் சேர்ந்து அவரது சகோதரி லட்சுமியும், விஜயலட்சுமியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த விஜயலட்சுமி கடந்த 2010&ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குபதிவு செய்து துரைப்பாண்டி, லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
7 ஆண்டு சிறை
முடிவில், அந்த இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன்பேரில் துரைப்பாண்டிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அவரது சகோதரி லட்சுமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.
///////////////


Next Story