அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதமடைந்தது.


அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதமடைந்தது.
x
தினத்தந்தி 21 Sep 2021 10:10 PM GMT (Updated: 21 Sep 2021 10:10 PM GMT)

அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதம்

அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதமடைந்தது. 
ரூ.2 கோடி வாழைகள்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, கேசரிமங்கலம், பூதப்பாடி, பூனாட்சி, குறிச்சி, ஒலகடம், கொளந்தபாளையம், செம்புளிச்சாம்பாளையம், கல்பாவி உள்ளிட்ட  பகுதிகளில் நேற்று முன்தினம் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் திடீரென கருமேகக்கூட்டம் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரம் நிற்காமல் பலத்த மழையாக கொட்டியது. அப்போது ஒலகடம் பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட தாளபாளையம், எட்டிக்குட்டை, கல்பாவி, கேசரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.
 இந்த பகுதிகளில் சுமார் 40 விவசாயிகள் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில், நேந்திரம், கதலி, செவ்வாழை போன்ற ரக வாழைகளை பயிரிட்டுள்ளனர். காய்கள் திரண்டு இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்தது. திடீரென வீசிய சூறாவளிக்காற்றால் சுமார் 50 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்தும், பாதி முறிந்தும் சேதமாயின. இதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தார்கள். 
வெற்றிலை கொடிகள்
இதேபோல் எட்டிக்குட்டை பகுதியில் ஆலங்கட்டி மழை சூறாவளிக்காற்றுடன் வீசியது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலைக் கொடிகள் சேதமடைந்தது.
சேதமான வெற்றிலைக் கொடிகள் மீண்டும் முறையாக வளர்க்க 5 வருடங்கள் ஆகும் என விவசாயி கவலை தெரிவித்தார். சேதமான வெற்றிலையின் மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கும் என்று தெரியவருகிறது. 
கடன் வாங்கி பயிரிட்டு இருந்தோம். அனைத்தும் நாசமாகிவிட்டது. இனி என்ன செய்வது என்று தெரியவில்லையே என்று நஷ்டம் அடைந்த விவசாயிகள் வேதனை பட்டார்கள். மேலும் சேதமான பயிர்களை அதிகாரிகள் முறையாக கணக்கிட்டு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். 


Related Tags :
Next Story