விபசார அழகி மீட்பு புரோக்கர் கைது
விபசார அழகி மீட்பு புரோக்கர் கைது
கோவை
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருக்கு, வாட்ஸ்-அப்பில் அழகிகளின் புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வந்தது. மேலும் பணம் கொடுத்தால் ஓட்டலில் உள்ள அறைக்கு சென்ற உல்லாசமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து அந்த வாலிபர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்த புரோக்கர் விக்னேஷ் (வயது31) என்பவரை கைது செய்தனர்.
அங்கு விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த 29 வயது அழகியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
----
Reporter : M.ABULKALAMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore
Related Tags :
Next Story