அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல்


அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sept 2021 2:31 AM IST (Updated: 23 Sept 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள்.

அந்தியூர்
அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள். 
கஞ்சா விற்பனை
அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அந்தியூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து சென்றார்கள்.
அப்போது தவுட்டுபாளையம் மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு பெண்ணும், ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தார்கள். இதனால் போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த பெண் மதுரையை சேர்ந்த பாப்பா (வயது 45) என்பதும், மற்றொருவர் கோபியை சேர்ந்த சந்தியாகு (50) என்பதும் தெரியவந்தது. 
2 பேர் கைது
மேலும் பாப்பா மதுரையில் இருந்து அந்தியூருக்கு பஸ்சில் கஞ்சாவை கடத்தி வந்து, அதை சில்லரையில் விற்க சந்தியாகுவிடம் கொடுப்பதும், அவர் விற்று வருவதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பாப்பா, சந்தியாகு இருவரும் பதுக்கிவைத்திருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள்.
அதன்பின்னர் தனிப்படை போலீசார் பாப்பாவையும், சந்தியாகுவையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் அந்தியூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.
அத்தாணி
அத்தாணி தனியார் வங்கி அருகே தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் பெயர் ராதாமணி (33) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஸ்கூட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story