அலங்காநல்லூர், ஒத்தக்கடை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


அலங்காநல்லூர், ஒத்தக்கடை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Sept 2021 2:31 AM IST (Updated: 23 Sept 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர், ஒத்தக்கடை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

வாடிப்பட்டி
சமயநல்லூர் கோட்டம் அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும். இதனால் அலங்காநல்லூர், கோட்டைமேடு, கல்லணை, சர்க்கரை ஆலை மெயின்ரோடு,  மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அழகாபுரி, அம்பலத்தடி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின் கோட்ட மின்னியல் செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கருப்பாயூரணி, காளிகாப்பான், வீரபாஞ்சான், ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாய கல்லூரி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
&&&&&

Next Story