நகை திருட்டு


நகை திருட்டு
x
தினத்தந்தி 23 Sept 2021 2:51 AM IST (Updated: 23 Sept 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

5 பவுன் நகை, 50 ஆயிரம் திருட்டு

மதுரை
மதுரை கீழ ஆவணி மூலவீதி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் மனைவி நிகில்ஜெயின்(வயது 21). சம்பவத்தன்று இவர் தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றி மர பீரோவில் வைத்துள்ளார். மறுநாள் அந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தர். மேலும் அதில் வைத்திருந்த நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இது குறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். அதில் வீட்டில் வேலை செய்யும் பெண் கவுரிசங்கர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மதுரை பழங்காநத்தம், தெற்கு தெருவை சேர்ந்தவர் தவமணி(27). சம்பவத்தன்று இவர் 2  பவுன் நகையை பை பாஸ் ரோட்டில் உள்ள வங்கிக்கு அடகு வைக்க சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவையான பணம் கிடைக்கவில்லை என்பதால் வீட்டிற்கு திரும்பி சென்றார். வழியில் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று டீ சாப்பிட்டுள்ளார். அப்போது அவரது பையை திறந்து பார்த்த போது அதிலிருந்த 2 பவுன் நகையை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
1 More update

Next Story