சர்வதேச பளுதூக்கும் போட்டி


சர்வதேச பளுதூக்கும் போட்டி
x
தினத்தந்தி 23 Sept 2021 2:51 AM IST (Updated: 23 Sept 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச பளுதூக்கும் போட்டி

மதுரை
இந்தியா-நேபாளம் இடையே சர்வதேச அளவிலான பளுதூக்கும் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து மதுரை சிம்மக்கல் ஸ்ரீசாரதா வித்யாவனம் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் மாணவி 14 வயதிற்குட்பட்ட பிரிவில்  ஐஷ்வர்யா 59 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் பூஜா 81 கிலோ எடை பிரிவில் தங்கமும், 16 வயதிற்குட்பட்ட பிரிவில் லோஹிதா வெள்ளி பதக்கமும் வென்றனர். மேலும் பள்ளியின் முன்னாள் மாணவிகள் கலாஸ்ரீ, ஹரினி ஆகியோர் தங்கமும், சிவசத்தியா வெள்ளியும் வென்றனர். பள்ளி பயிற்சியாளர் காஞ்சாவும் பயிற்சியாளர்களுக்கு இடையேயான போட்டியில் தங்கபதக்கம் வென்றார். இதன் மூலம் ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளி மாணவிகள் 4 தங்கம், 2 வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 
சர்வதேச போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்று மாணவிகள் ரெயில் மூலம் சேலம் வந்து அங்கிருந்து பஸ்சில் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பதக்கம் வென்ற மாணவிகள் கூறும் போது, தொடர்ந்து சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.
1 More update

Next Story