தாளவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் விவசாயிகள் வேதனை


தாளவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 23 Sept 2021 3:01 AM IST (Updated: 23 Sept 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.

தாளவாடி
தாளவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். 
மக்காச்சோளம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி, தலமலை, கேர்மாளம், குளியாடா என 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிர் செய்வது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டும் கடந்த மாதம் பெய்த சாரல் மழைக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளவாடி மலைப்பகுதி முழுவதும் நடவு செய்யப்பட்டுள்ளது. 3 மாத கால பயிரான மக்காச்சோளம் தற்போது சிறிய அளவில் வளர்ந்துள்ளது. 
படைப்புழு
இந்த நிலையில் பயிர்களில் தற்போது படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளது. பயிர்களின் இழைகளை படைப்பூழுக்கள் தின்றுவிடுவதால் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி தாளவாடி பகுதி விவசாயிகள் கூறும்போது, கடந்த மாதம் பெய்த மழைக்கு மக்காச்சோளம் பயிர் செய்தோம். தற்போது மக்காச்சோள செடியில் படைப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் பயிர்கள் மேற்கொண்டு வளர்வது தடைபட்டுள்ளது. 
கோரிக்கை
கடந்த 5 வருடமாகத்தான் படைப்புழுக்கள் மக்காச்சோள பயிரை தாக்கி வருகிறது. இதை தடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். கடன் வாங்கி பயிர் செய்தோம். நோய்தாக்கி உள்ளதால் மகசூல் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று வேதனைப்பட்டார்கள். 
மேலும் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரிகள் கள ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். 


Next Story