ஈரோடு அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு
ஈரோடு அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு அருகே நரிப்பள்ளம் ஓடை பகுதியில் கீழ்பவானி கொப்பு வாய்க்கால் செல்கிறது. அங்கு நேற்று காலை ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதன் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும், 3 வீடுகளின் முன்பும் தண்ணீர் தேங்கி நின்று சூழ்ந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
Related Tags :
Next Story