28 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைய தொடங்கியது
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், கடந்த 28 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைய தொடங்கி உள்ளது. மேலும் பவானி ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர்
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், கடந்த 28 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைய தொடங்கி உள்ளது. மேலும் பவானி ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் நிறுத்தப்பட்டது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.
102 அடியில் இருந்து...
தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லை. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 319 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 470 கன அடியும், உபரி நீராக வினாடிக்கு 30 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,432 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.98 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 28 நாட்களுக்குப் பிறகு 102 அடியில் இருந்து குறைய தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story