ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தது.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 50 கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த கன்றுக்குட்டிகள் ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
நேற்று வழக்கமான சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். 350 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 550 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
வரத்து அதிகரிப்பு
இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.45 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.65 ஆயிரத்துக்கும் விற்பனையானது. காஞ்சீபுரம், தேனி, திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை விலைபேசி பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, கொரோனா தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக சந்தை நடைபெறாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக சந்தை கூடி வருகிறது. முதல் வாரம் நடந்த சந்தைக்கு 100 மாடுகளுக்கும் குறைவாகவே வந்திருந்தது. 2-வது வாரம் நடந்த சந்தைக்கு 400 மாடுகளும், இந்த வாரம் 550 மாடுகளும் என மாடுகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரமும் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. எனினும் உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்ததால் இன்று (அதாவது நேற்று) கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனையாகி உள்ளதுÕ என்றனர்.
Related Tags :
Next Story