சிவகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா
சிவகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
சிவகிரி
சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் கடந்த 21-ந் தேதி சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பிளஸ்-2 மாணவர்கள் 3 பேர், பிளஸ்-1 மாணவர் ஒருவர் என 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் சிவகிரி பேரூராட்சி சார்பில் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story