பயிர் காப்பீடு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


பயிர் காப்பீடு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2021 2:58 AM IST (Updated: 25 Sept 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீடு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு
பயிர் காப்பீடு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மஞ்சள் ஏற்றுமதி
ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பேசினர்.
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு பேசுகையில், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பயிர் காப்பீடு நிலுவை தொகை பாதி அளவு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே நிலுவை தொகையை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி தடையால், விலை குறைந்துள்ளது. இதை அரசு சரி செய்ய வேண்டும் என்றார்.
ஆக்கிரமிப்பு
தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பெரியசாமி கூறும்போது, தனியார் கடையில் யூரியா உரம் கேட்டால், டி.ஏ.பி. அல்லது வேறு உரம் வாங்க வேண்டும் என நிர்பந்தப்படுத்துகின்றனர் என்றார்.
சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சென்னியப்பன் கூறும்போது, கரும்பு வெட்டிய 15 நாட்களில் தொகையை விவசாயிகளுக்கு வழங்காவிட்டால், ஆலையின் அரவையை நிறுத்த வேண்டும். அந்த ஆலைக்கு பதிவு செய்த கரும்பை வேறு ஆலைக்கு வெட்டி கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.
உடைப்பு
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை துணைத்தலைவர் ராமசாமி பேசும்போது, கீழ்பவானியில் தரமற்ற கட்டுமானத்தால் உடைப்பு ஏற்பட்டு, பாசனத்துக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் பாதித்துள்ளனர் என்றார்.
மலைவாழ் மக்கள் நலச்சங்க தலைவர் வி.பி.குணசேகரன் கூறும்போது, விளை நிலங்களை ஒட்டி டாஸ்மாக் கடைகள் உள்ளதால், மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு, காலி பாட்டில்களை விளை நிலங்களில் வீசி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் கால்களில் மது பாட்டில்கள் குத்தி காயம் ஏற்படுகிறது. எனவே, மது வாங்க வருவோர், காலி பாட்டில் கொண்டு வந்தால்தான் மது வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும்Õ என்றார்.  

Next Story