மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகள் கைது + "||" + Arrest

ஈரோடு மாவட்டத்தில்தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகள் கைது

ஈரோடு மாவட்டத்தில்தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகள் கைது
ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகளை போலீசாா் கைது செய்தனா்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும், மேற்கு மண்டல போலீஸ் துறை தலைவர் மற்றும் கோவை சரக போலீஸ் துணைத்தலைவர் ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக இரவு தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் 2-வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
இதே போல் மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் 65 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
288 தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த தீவிர வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரத்து 352 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்களின்றி வந்த 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2. கஞ்சா விற்ற 3 பேர் கைது
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரம்:மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது
இலங்கையை சேர்ந்தவர்கள் கைதான விவகாரத்தில் மதுரையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
4. விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
5. சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
சங்கராபுரம் அருகே நடந்த கொலை வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது