திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரி 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Sept 2021 2:59 AM IST (Updated: 26 Sept 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
பண்ணாரி அருகே திம்பம் மலைப்பாதை செல்கிறது. இந்த பாதை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. இதனால் எப்போதும் பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாதாரணமாக வரும் லாரிகள் இந்த மலைப்பாதையை கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் நாள்தோறும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. 
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் குஜராத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டு இருந்தது. நேற்று காலை 11 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 8-வது கொண்டை ஊசி வளைவை கடந்தது. அப்போது லாரி திரும்ப முடியாமல் அப்படியே நின்றுவிட்டது. 
இதனால் மலைப்பாதையின் இருபுறமும் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றுவிட்டன. இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவந்தன. அதன்பின்னர் மாற்று டிரைவர் ஒருவர் வந்து லாரியை லாவகமாக கொண்டை ஊசி வளைவில் இருந்து திருப்பினார். இதையடுத்து சுமார் 2 மணி நேர போக்குவரத்து பாதிப்புக்கு பிறகு திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது. திம்பம் மலைப்பாதையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை தீர்க்க வழியே இல்லையா? என்று பயணிகள் புலம்பியபடி சென்றார்கள்.

Next Story