காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 8,513 பேர் போட்டி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 15-ந் தேதி தொடக்கியது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் மொத்தம் 8,603 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று வேட்பு மனுதாக்கல் மீதான பரிசீலனையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 மனுக்களும், கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 22 பேர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 50 மனுக்கள் என 90 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 8,513 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டு போட்டியிடுகிறனர்.
Related Tags :
Next Story