பெண் கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பெண் கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
சென்னை,
சென்னையில் கொலை, கொலை முயற்சி, கடத்தல், நில அபகரிப்பு, போக்சோ மற்றும் பாலியல் உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது ஓராண்டு ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் குற்ற வழக்கில் சிக்கிய அரவிந்தன் (வயது 25), கங்கு கார்த்திக் (22), சுரேஷ் (23), இளையா (34), ‘யூடியூப்‘ கார்த்திக் (28), நாகராஜ் (22), டில்லிபாபு (22), செந்தில்வேல் (38), அறிவுநிதி (27), சதீஷ்குமார் (22), உதயவாணி (35), ஞான பிரகாசம் (31) ஆகிய 12 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உதயவாணி, அயனாவரம் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story