காஞ்சீபுரம் மாவட்டத்தில் 33 ரவுடிகள் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ரவுடிகளை பிடித்து 43 ஆயுதங்கள் பறிமுதல் செய்த நிலையில், 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
தமிழகம் முழுவதும் சமீப காலமாக தலையை துண்டித்து கொலை செய்வது, கூலிப்படையை ஏவி கொல்வது, தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவுறுத்தினார். மேலும் வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங் களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பேரில், காஞ்சீபுரம் மாவட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் ரவுடிகளுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 70 ரவுடிகள் பிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து 43 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களில் 33 நபர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 நபர்கள் மீது ஓராண்டிற்கு நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 31 ரவுடிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story