தீனதயாள் உபாத்யாயாவின் 105-வது பிறந்த நாள் பா.ஜ.க. கொண்டாட்டம்

தீனதயாள் உபாத்யாயாவின் 105-வது பிறந்த நாள் பா.ஜ.க. கொண்டாட்டம்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 105-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதே போன்று, பா.ஜ.க. முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் 14-வது நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உருவ படத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மலர் தூவி மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, ‘இல்லம் செல்வோம்! உள்ளம் வெல்வோம்!‘ திட்டத்தின் இணையதளத்தையும் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், பா.ஜ.க. இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவன் விநாயகம், பொதுச்செயலாளர் கரு நாகராஜன், நடிகை காயத்ரி ரகுராம், கருப்பு முருகானந்தம், வக்கீல் பால்கனகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை குளறுபடி நிறைந்ததாகவே உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் 4 மாத காலத்தில் ஏராளமான தவறுகள் நடந்துள்ளன. அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி ஊராட்சி தேர்தலில் வாக்குகளை சேகரிப்போம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பழிக்குப்பழி கொலைகள் அதிகரித்து வருகிறது. பழிக்குப்பழி கொலைகள் ஆரம்பித்தால் முடிவுக்கு எல்லையில்லாமல் போய்விடும். எனவே அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story