ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்


ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 26 Sept 2021 11:21 PM IST (Updated: 26 Sept 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட பார்வையாளர் பழனிசாமி அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலர்களுக்கான (நோடல் அலுவலர்கள்) ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டி.மோகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைக்கான முன்னேற்பாடு பணிகள், வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட  அலுவலர்களிடம் தேர்தல் பார்வையாளர் கே.எஸ்.பழனிசாமி கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் கூறியதாவது:-

அறிவுரை

தேர்தல் பணிகளில் ஈடுபடும் நோடல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், சோதனைச்சாவடிகளில் பணியாற்றும் பறக்கும் படையினர், காவல்துறையினர் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை அவ்வப்போது உடனுக்குடன் பதிவு செய்து அவர்களின் தொடர்பு எண், நேரம் ஆகியவற்றை பதிவேட்டில் பதிவு செய்து முறையாக பராமரித்திட வேண்டும்.
மேலும் தேர்தல் சம்பந்தமான பதிவேடு பணிகளை முறையாக பராமரிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கிய அறிவுரையை பின்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
.

Next Story