வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்: தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகிகள் மீது வழக்கு


வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்: தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 Sept 2021 2:05 PM IST (Updated: 27 Sept 2021 2:05 PM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கி தருவதாக மோசடி புகார்: தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகிகள் மீது வழக்கு.

சென்னை,

சென்னை அண்ணாநகரில் செயல்படும் அக்னி தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமி மீது சிலம்பரசன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அரசு வேலை வாங்கி தருவதாக அந்த ஐ.ஏ.எஸ்.அகாடமி நிர்வாகிகள் ரூ.10 லட்சம் வாங்கியதாகவும், வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டதாகவும், அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Next Story