பள்ளி ஆசிரியரை கீழே தள்ளி செல்போன் பறிப்பு
பள்ளி ஆசிரியரை கீழே தள்ளி செல்போன் பறிப்பு.
பூந்தமல்லி,
வேலூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியில் சேர்வதற்காக நடந்த தேர்வில் பங்கேற்க வேலூரில் இருந்து பஸ்சில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார். பின்னர் மதுரவாயலில் உள்ள தன்னுடைய நண்பரை பார்க்க கோயம்பேடு மார்க்கெட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், மணிகண்டன் கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட மணிகண்டன், செல்போனை பறிக்க விடாமல் கொள்ளையர்களுடன் போராடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், மணிகண்டனை கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story