மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம் + "||" + Intensity of printing of ballot papers for local elections in Kanchipuram district

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்
காஞ்சீபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர், ஒன்றியக்குழு கவுன்சிலர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், சிற்றூராட்சி வார்டு கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க சின்னங்களும் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவடைந்தது.

வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி

இந்நிலையில் காஞ்சீபுரம் கூட்டுறவு அச்சகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் சரிபார்க்கப்பட்டு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியை கூட்டுறவு அச்சக பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டுறவு அச்சகத்தில் நடைபெற்றுவரும் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க.வில் இன்று முதல் 29-ந்தேதி வரை விருப்ப மனு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க.வில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.
2. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 7-ந் தேதி பா.ஜ.க. விருப்பமனு பெறுகிறது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 7-ந் தேதி பா.ஜ.க. விருப்பமனு பெறுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் பணிக்குழு.
3. உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
4. குன்றத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் நிறுத்தப்பட்ட பூந்தண்டலம் ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு நடந்தது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி இரண்டாம் கட்டமாக குன்றத்தூர் ஒன்றியம், ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
5. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
!-- Right4 -->