திருவள்ளூர் அருகே பரிதாபம் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளித்த போது நீரில் மூழ்கி கம்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
திருவள்ளூர்,
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் (வயது 26). இவர் ஐ.டி.நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சஞ்சீவ் தனது நண்பர்களான வானகரத்தை சேர்ந்த ராஜ்குமார் (26), பட்டாபிராம் சோரஞ்சேரி பகுதியை சேர்ந்த மற்றொரு ராஜ்குமார் (27) ஆகியோருடன் தனது காரில் திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் மாலை 4 மணியளவில் அரண்வாயல் பகுதியில் பூண்டிலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்பு கால்வாயில் இறங்கி சந்தோஷமாக குளித்துள்ளனர். இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், தண்ணீரில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவ் மூழ்கியதில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். இதைக்கண்ட அவருடன் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்து சஞ்சீவை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
உடல் பிணமாக மீட்பு
இதுகுறித்து உடனே அங்கிருந்தவர்கள் செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து மாயமான சஞ்சீவை தேடுவதற்கு வசதியாக கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 5 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர், இரவு 10 மணி மணியளவில் சஞ்சீவ் உடலை கால்வாயில் கண்டெடுத்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அதைத்தொடர்ந்து சஞ்சீவ் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நண்பர்களுடன் வந்து கிருஷ்ணா கால்வாயில் குளித்த ஐ.டி நிறுவன ஊழியர் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story