வெடிமருந்து வைத்திருந்த வீட்டு உரிமையாளர் கைது இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
அந்தியூர் அருகே வாலிபர் இறந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர் அருகே வாலிபர் இறந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் சாவு
அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் கொமராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது வீட்டின் முன்பகுதியில் கூரை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. இதற்காக இரும்பு கம்பிகளை கொண்டு சட்டம் அமைக்கும் வேலை நடந்தது.
இதில் அந்தியூர் சங்கராபாளையத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான வெற்றிவேல் (35) மற்றும் அவருடைய உறவினர்கள் 2 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்ேபாது வெற்றிவேல் வெல்டிங் எந்திரத்தை இயங்கி கொண்டிருந்தபோது எந்திரத்தில் இருந்து தீப்பொறி வீட்டில் வைத்திருந்த வெடிபொருள் மீது பட்டது. இதில் வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் வெற்றிவேல் மீது தீப்பிடித்தது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சாலை மறியல்
மேலும் அவருடன் வேலை செய்து கொண்டிருந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் விசாரணை நடத்தி வெடிபொருள் வைத்திருந்ததாக வீட்டின் உரிமையாளர் தீபன் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவரை கைது செய்யக்கோரியும், இறந்த வெற்றிவேலின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு தொகை வழங்க கோரியும் அவரது உறவினர்கள் நேற்று காலை 10 மணி அளவில் அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கைது
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, ‘இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வீட்டில் வெடிபொருள் வைத்திருந்ததாக தீபனை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோபி 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story