வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மழையால் குளு குளு காலநிலை நிலவுவதால், வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.
வால்பாறை
மழையால் குளு குளு காலநிலை நிலவுவதால், வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.
வருகை அதிகரிப்பு
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று வால்பாறை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளுகுளு காலநிலை நிலவியது.இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
பரிசு வழங்கி வரவேற்பு
இதற்கிடையில் உலக சுற்றுலா தினம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உலக சுற்றுலா தினத்தையொட்டி வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் இனிப்பு மற்றும் பரிசு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி அமைதியாக காணப்படும் இயற்கை எழில் கொஞ்சும் வால்பாறை பகுதியை தொடர்ந்து இதே நிலையில் பாதுகாக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story