கோவையில் மறியலில் ஈடுபட்ட 485 பேரை போலீசார் கைது


கோவையில் மறியலில் ஈடுபட்ட  485 பேரை போலீசார் கைது
x
தினத்தந்தி 27 Sept 2021 11:04 PM IST (Updated: 27 Sept 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவையில் மறியலில் ஈடுபட்ட 485 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவையில் மறியலில் ஈடுபட்ட  485 பேரை போலீசார் கைது செய்தனர். 

ரெயில் நிலையம் முன்பு மறியல்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாய சங்கத்தினர் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கோவை ரெயில் நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் 500 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்களை போலீ சார் தடுத்த நிலையில் தடையை மீறி ரெயில் நிலைய வளாகத்திற்குள் சென்று முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காய்கறி மாலை 

மேலும் கோவை ரெயில் நிலையம் முன்பாக பார்வைக்காக வைக்கப் பட்டுள்ள ரெயில் என்ஜினின் மீதும் தொழிற்சங்கத்தினர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற விவசாயிகளில் சிலர் காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு மறியலில் பங்கேற்றனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.நடராஜன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், எச்.எம்.எஸ். மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜா மணி, மனோகரன் உள்பட 420 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் காரணமாக ரெயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

485 பேர் கைது 

கோவை டவுன்ஹால் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். அப்போது சட்ட நகல்களை கிழித்து எறிந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

மறியலில் ஈடுபட்ட 65 பேரை போலீசார்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் உக்கடத்தில் மறியல் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். கோவை மாநகர பகுதி முழுவதும் மொத்தம் 485 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ்கள் ஓடின

கோவையில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. டவுன்ஹால் உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் நகரில் பெரும்பாலான இடங்களில் கடைகள் திறந்து இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இதற்கு வக்கீல் சி.எம்.தண்டபாணி தலைமை தாங்கினார்.


Next Story