வியாபாரியிடம் ரூ 8 லட்சம் பறிமுதல்
அன்னூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.8 லட்சத்தை வியாபாரியிடம் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அன்னூர்
அன்னூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.8 லட்சத்தை வியாபாரியிடம் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் சோதனை
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற 9-ந் தேதி நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
எனவே வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை பறக்கும்படை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அன்னூர் உதவி தோட்டக்கலைத்துறை அதிகாரி ரவிக்குமார் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அன்னூரில் இருந்து காரமடை செல்லும் சாலையில் உள்ள கீழ்கதவுகரை அம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
ரூ.8 லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி, அதற்குள் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முரளிகுமார் (வயது 37) என்பது தெரியவந்தது.
மேலும் வாழைக்காய் வியாபாரியான அவர் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்து 200 ரொக்க பணம் வைத்து இருந்தார். உடனே அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அதற்கான எவ்வித ஆவணமும் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் முரளிகுமாரி டம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் அன்னூர் வட்டார வளர்ச்சி அதிகாரி நவமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள்
இது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் கூறும்போது, வியாபாரியான அவர் தன்னிடம் இருந்த பணத்தை விவசாயி ஒருவருக்கு கொடுக்க செல்வதாக கூறினார். ஆனால் அவரிடம் அந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லை.
எனவே ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பணம் கொண்டுசெல்லும்போது அதற்கான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story