போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரகளை செய்த போதை ஆசாமி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்


போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரகளை செய்த போதை ஆசாமி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 28 Sept 2021 2:12 PM IST (Updated: 28 Sept 2021 2:12 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ரகளை செய்த போதை ஆசாமி போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்.

சென்னை,

சென்னை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், போலீஸ்காரர் சதீஷ்குமார் பணியில் இருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்ற வாலிபர் மது போதையில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து, ரகளையில் ஈடுபட்டர்.

இதை தட்டிக்கேட்ட போலீஸ்காரர் சதீஷ்குமாரை பிளேடால் வெட்டி விடுவேன் என்று மிரட்டினார். ரோந்து பணிக்கு வரும்போது, உங்களை போட்டு தள்ளி விடுவேன் என்று நேரடியாக கொலை மிட்டலும் விடுத்தார்.

எனினும் போலீஸ்காரர் சதீஷ்குமார் கோபப்படாமல் போதை ஆசாமி கார்த்திக்கை சமாளித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். போதை ஆசாமி போலீஸ்காருக்கு கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதை தொடர்ந்து, இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் இதுபற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story