கும்மிடிப்பூண்டியில் கத்திமுனையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது


கும்மிடிப்பூண்டியில் கத்திமுனையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2021 7:32 PM IST (Updated: 28 Sept 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் கத்திமுனையில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது.

கும்மிடிப்பூண்டி,

சென்னை கொத்தவால்சாவடியை சேர்ந்தவர் இளம்பெண் திவ்யா (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ரெயிலில் வந்தார்.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தி முனையில் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக காட்டு அப்பாவரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற பொட்டு மணி (25), சிறுபுழல்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணா (23), கும்மிடிப்பூண்டி ஏரிக்கரையை சேர்ந்த முனுசாமி (32) ஆகிய 3 வாலிபர்களை நேற்று கைது செய்தனர்.

Next Story