ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜர்


ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜர்
x
தினத்தந்தி 28 Sept 2021 8:03 PM IST (Updated: 28 Sept 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கை மீறியதாக போலீசார் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் ஆஜரானார்.

கொரோனா ஊரடங்கை மீறியதாக போலீசார் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் ஆஜரானார்.
கொரோனா ஊரடங்கு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் உள்ள சு.முத்துசாமி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. எனவே கொரோனா ஊரடங்கை மீறி கூட்டம் கூடியதாக சு.முத்துசாமி உள்பட 10 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை ஈரோடு முதலாம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராவதற்காக அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் கட்சியினர் கோர்ட்டுக்கு வந்தார்கள்.
அமைச்சர் ஆஜர்
மாஜிஸ்திரேட்டு வடிவேல் முன்னிலையில் அமைச்சர் சு.முத்துசாமி உள்பட 10 பேரும் ஆஜரானாார்கள். அவர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு வடிவேல், வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சு.முத்துசாமி உள்பட தி.மு.க.வினர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜரானதால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story