100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் சங்கத்தினர் மனு
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது என சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது என சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
மனு
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 15 ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு மத்திய அரசு தற்போது ஊதியத்தை சமூக வாரியாக பிரித்து வழங்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்க சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுடர் நடராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.கே.முருகன் மற்றும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி மணி மாலாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பாகுபாடு காட்டக்கூடாது
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்தை சமூக வாரியாக வழங்குவது சட்ட விரோதம் ஆகும். தொழிலாளர்கள் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கின்ற செயல் இது ஆகும். சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 15 ஊராட்சிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் ஒரு மாத காலமாக ஊதியம் வராமல் உள்ளது. மற்ற சமூக தொழிலாளர்களுக்கு மட்டும் தொடர்ந்து ஊதியம் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே இது போல ஊதியம் பிரித்துக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். சமூக பாகுபாடு காட்டாமல் ஒரே நேரத்தில் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story