சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிய 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிய 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Sep 2021 3:06 PM GMT (Updated: 2021-09-28T20:36:34+05:30)

சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக முதியவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக முதியவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
ரகசிய தகவல்
சத்தியமங்கலம் வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர். 
பறிமுதல்
இதையடுத்து அந்த வீட்டில் உள்ளவரிடம் போலீசார் விசாரணை மேற்ெகாண்டனர். விசாரணையில் அங்கு விற்பனைக்காக  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரிடம் இருந்த 20 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

Next Story