அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2021 3:34 PM GMT (Updated: 28 Sep 2021 3:34 PM GMT)

ஈரோட்டில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு 195 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணியில் இறந்த தொழிலாளியின் வாரிசுக்கு ரூ.3 லட்சம் மற்றும் வாரிசு வேலை வழங்க வேண்டும். கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் ஓய்வூதியருக்கு வழங்க வேண்டிய பங்கு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் நடராஜன், துணை பொதுச்செயலாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர் ஜெயராமன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
---------

Next Story