ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி வாலிபர் உள்பட 2 பேர் கைது
ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பழந்தன்னிப்பட்டியை சேர்ந்தவர் முருகேஷ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 20). இவர் ஈரோடு கே.ஏ.எஸ். நகரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை மணிகண்டன் வேலையை முடித்துவிட்டு கருங்கல்பாளையம் காவிரிக்கரை வெற்றிநகர் பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மணிகண்டன் அருகில் வந்து நின்றார்கள். அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி மணிகண்டனிடம் இருந்த 2 செல்போன்களை வழிப்பறி செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்கள்.
இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மணிகண்டனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியை சேர்ந்த நாகராஜின் மகன் லோகநாதன் (20), 17 வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மீட்கப்பட்டன. மேலும், மோட்டார் சைக்கிள், அரிவாள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story