அதிக பாரம் ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல்


அதிக பாரம் ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Sept 2021 9:47 PM IST (Updated: 28 Sept 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

அதிக பாரம் ஏற்றி சென்ற 3 லாரிகள் பறிமுதல்

கிணத்துக்கடவு

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் அரசம்பாளையம் பகுதியில் நேற்று திடீரென தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது அந்தவழியாக வந்த லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரிகளில் அதிக பாரம் ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதனையடுத்து 3  லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து கிணத்துக்கடவு போலீஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளும் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 700 ரூபாய் போலீசார் அபராதம் விதிக்கப்பட்டது. 

Next Story