தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 28 Sept 2021 11:29 PM IST (Updated: 28 Sept 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


கழிப்பிடமாக மாறிய நடைபாதை

  கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலையில் காவலர் குடியிருப்புக்கு அருகே உள்ள காங்கிரீட் நடைபாதை ஓரங்களில் பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுப்ரமணி, கோத்தகிரி.

காட்டெருமைகள் நடமாட்டம்

  கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் தினமும் கும்பலாக காட்டெருமைகள் உலா வந்த வண்ணம் உள்ளன. இதனால் பள்ளி மாணவர்களை தாக்கக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.

  எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும்.

  அன்பரசன், கோத்தகிரி.

கழிப்பறை வேண்டும்

  கோவையை அடுத்த கோவைப்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு கழிப்பறை இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே மாநகராட்சி நிர்வாகம் இங்கு கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுரேஷ், கோவைப்புதூர்.

சாலையில் அபாய குழி

  கோவை 55-வது வார்டு பாப்பநாயக்கன் பாளையம் தண்டபாணி வீதியில் நடுரோட்டில் திடீரென்று அபாயகரமான குழி உருவாகி உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த குழி காரணமாக விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

எனவே விபத்து ஏற்படும் முன்னர் அந்த இடத்தில் உள்ள குழியை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  முத்துகுமார், தண்டபாணி வீதி.

குப்பைத்தொட்டி வைக்கப்படுமா?

  கோவை கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் இல்லை.

இதனால் சாலையோரங்களில் வீசப்படும் குப்பைகள் காற்றில் பறக்கின்றன. எனவே இந்தப் பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

  இளங்கோவன், கீரணத்தம்.

வாகன ஓட்டிகள் அவதி

  கிணத்துக்கடவு ‌ஊராட்சி ஒன்றியம் சோழனூர் ஊராட்சியில் கடந்த ஏப்ரல் மதம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சாலை முழுவதும் தோண்டப்பட்டு உள்ளது.

 ஆனால் அந்த பணிகள் மெதுவாக நடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

  செழியன், சோழனூர்.

சாலையில் திரியும் கால்நடைகள்

  புலியகுளம் போலீஸ் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த வழியாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

 எனவே கால்நடை உரிமையாளர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

  சிவக்கொழுந்து, கோவை.

காற்றில் பறக்கும் குப்பைகள்

  கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி எக்ஸ்டென்ஷன் தனியார் மருத்துவமனை அருகே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் குப்பைகளை சரியான நேரத்திற்கு அகற்றாமல் இருப்பதால் தொட்டியில் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் குப்பைத்தொட்டி கீழே சரிந்து கிடைப்பதால் குப்பைகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. எனவே குப்பைத் தொட்டிகளை சரியாக வைத்து குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

  கண்ணன், செல்வபுரம்.

பழுதடைந்த சாலை

  கோவை குறிச்சி சிட்கோ பேஸ்- 2 மற்றும் எக்ஸ்டென்சன் பகுதியில் கடந்த பல வருடங்களாக சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது கூட மிகவும் சிரமமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.

  ஜெனு, ஹவுசிங் யூனிட்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் ரோட்டோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கும், குப்பைகளை கொட்டுவதற்கு தொட்டி வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ரஞ்சித், ஆனைமலை

போக்குவரத்து நெருக்கடி

  பொள்ளாச்சி நகரில் உடுமலை ரோடு, கோவை ரோட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பணிகள் முடிந்த இடங்களில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

 எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ரதீஷ், பொள்ளாச்சி


Next Story