காஞ்சீபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்


காஞ்சீபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்
x
தினத்தந்தி 29 Sept 2021 3:42 PM IST (Updated: 29 Sept 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 2-ந்தேதி நடக்கிறது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர் மாதம் 2-ந்தேதி மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் நவம்பர் 14-ந்தேதி ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளன.

மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 1 மணிக்கும் தொடங்கப்பட உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் இந்த பேச்சு் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story